இருமடி பாத்தி அமைக்கும் முறை
Uploaded 1 month ago | Loading
14:21
உலர்ந்த மர கிளைகளை கொண்டு இருமடி பாத்தி உருவாக்க , மண்ணைத் தோண்டி , பின்னர் உலர்ந்த மர கிளைகள், பயிர் எச்சங்களை கொண்டு நிரப்பி பின் தோண்டிய மண்ணை குழியின் மேல் மீண்டும் நிரப்புவது ஆகியவை அடங்கும். நீங்கள் இதில் மாட்டு சாண கரைசலை தெளிக்க வேண்டும் , இதில் பல நன்மை பயக்கும் நுண்ணுயிரிகள் உலர்ந்த மர கிளைகளை சிதைத்து , ஊட்டச்சத்து நிறைந்த உரமாக மாற்றுகிறது.ஒரு வாரம் கழித்து, நீங்கள் உங்கள் நாற்றுகளை இந்த பாத்தியில் நடலாம் அல்லது விதைகளை விதைக்கலாம். உலர்ந்த இலைகள் அல்லது வைக்கோல் கொண்டு நாற்றுகளுக்கு இடையில் மூடாக்கு போடவேண்டும்
Current language
Tamil
Produced by
Shanmuga Priya J.